உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, October 25, 2016

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!



அன்பு நிறைந்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமதூரில், அதிரையின் கல்வித்தந்தை ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களின் தன்னலமற்ற தியாகத்தால் உருவாகிய கல்வி நிறுவனங்கள் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கண் திறந்துள்ளது இனியும் திறக்கும் இன்ஷா அல்லாஹ். அன்னார் மற்றும் அவருடன் கல்விப்பணியில் இணைந்து பயணித்து மறைந்த அனைத்து ஊழியர்கள், பேராசிரியர்களின் மறுமை சிறக்க இருகரமேந்தி நன்றியுடன் பிரார்த்திக்கின்றோம்.

சில பத்தாண்டுகளுக்கு முன் நமது கல்லூரியை தேடிவந்து பல வெளிநாட்டு மாணவர்கள் (ஆப்பிரிக்கர்கள்) படித்த நினைவுகள் நெஞ்சோடு இன்னும் நிழலாடுகிறது. இத்தனைக்கும் அவர்கள் தங்கிப்படிக்கும் அளவுக்கு நமதூரின் கட்டமைப்பு இருக்கவில்லை, இன்றும் இல்லை.

காடு, செடிகளுக்கு மத்தியில் சாதாரண சிமெண்ட் ஓட்டுக்கட்டிடங்களில் நடந்து வந்த நமது கல்லூரி இன்று பலரின் உழைப்பால் ஒரு வளர்ந்த நகரத்தில் செயல்படும் கல்லூரிக்கு இணையாக பொலிவுற்று விளங்குகின்றது அல்ஹம்துலில்லாஹ், இது புறத்தோற்றம்.

இன்றுள்ள பேராசிரியப் பெருந்தகைகளின் முயற்சியால் மாணவர்களுக்கு வழிகாட்டும் பல்வேறு கருத்தரங்குகள், வேலைவாய்ப்பு முகாம்கள் என நடத்தி அசத்தி வருகின்றீர்கள், இந்த அகத்தோற்ற வளர்ச்சியை சமூக ஊடகங்கள் வழியாக அறிந்து மிக்க பெருமிதம் கொள்கின்றோம். இதையே நடந்து முடிந்தபின் செய்திகளாக தருவதைவிட நடக்குமுன் அறியத்தந்தால் நமது கல்லூரியில் பயிலும் நாங்கள் அறிந்த மாணவர்களையும் ஆர்வமூட்டி கலந்து கொள்ளச் செய்ய இயலும்.

மேலும், இந்தக் கருத்தரங்குகளில் மாணவர்களைவிட மாணவிகளே பெரும்பான்மையாக கலந்து கொள்கின்றனர், அதிலும் நமதூர் மாணவர்கள் மிக மிக அரிதாக கலந்து கொள்கின்றனர். எனவே, மாணவர்களும் அதிகம் பங்குகொள்ள ஆர்வமூட்டுவதுடன் நமதூர் மாணவர்களும் பயன்பெற அவர்களின் பெற்றோருக்கு தெரிவித்தாவது முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.


உங்களிடம் மேலும் சில கனிவான வேண்டுகோள்:

இன்று நமதூரை சேர்ந்த, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் உள்நாட்டிலும் பல சர்வதேச நாடுகளிலும் பொருளீட்டி வருகின்றனர் என்றாலும் வேறு எந்த நாடுகளையும் விட அதிகமானோர் பணியாற்றும் அமீரகத்தில் நமது அதிரையை சேர்ந்த பல மாணவர்கள் படும்பாட்டை உங்களிடம் சுட்ட விரும்புகிறேன்.

பட்டதாரியானால் போதும் என்ற மனநிலையுடன் படித்துவிட்டு அமீரகத்திற்குள் நுழையும் அதிரை மாணவர்கள் இங்கு நேர்முகத்  தேர்வை சந்திப்பதற்கும், ஆங்கிலத்தில் ஓரளவேனும் உரையாடுவதற்கும் மிகுந்த தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் பலர் பட்டதாரியாக இருக்கும் நிலையில் கல்வியறிவு அதிகம் தேவையில்லாத 'பைக் மெஸஞ்சர்' போன்ற ஆபத்தான பணிகளையே தேர்ந்தெடுக்கின்றனர், இந்த நிலைக்கு அவர்களுக்கு முன்வந்து அமீரகத்தில் பணியாற்றும் அவர்களின் நண்பர்களின் தவறான வழிகாட்டலும் இன்னொரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, நமது கல்லூரி மாணவர்கள் ஓரளவு ஆங்கிலத்தில் பதிலளிக்கவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் தினசரி வகுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் மனநல வல்லுனர்களை கொண்டு நம்பிக்கையளிக்கும் ஆலோசணை கருத்தரங்குகளையும் அடிக்கடி நடத்திட வேண்டுகிறோம்.

மிக முக்கியமாக, பேராசிரியப் பெருந்தகைகளே! உங்களுடைய திறமைகளை, அர்ப்பணிப்பு உணர்வுகளை, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் உங்களுடைய நல்லெண்ணத்தை மதிக்கும் அதேவேளையில் உங்களுக்குப் பின்னும் இத்தூய பணிகளை தொடர்ந்து செய்திடும் கல்வி வாரிசுகளை உருவாக்கிவிட்டு செல்வதும் உங்களுடைய கடமை என்பதை உணர்ந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளை இயன்றளவு இப்பொழுதே செய்யத் துவங்குவீர் எனவும் நம்புகிறோம்.

No comments:

Post a Comment