உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, April 27, 2015

மறக்கப்பட்ட உயிர்த் தியாகம்! அந்த இளைஞன் யார்? அவன் பெயர் என்ன?

டிசம்பர் 19, 1927-ம் ஆண்டு.

அது ஒரு துயரமான நாள். என்னவோ தெரியவில்லை, இந்திய நாட்டுக்கும் டிசம்பருக்கும் ஏழாம் பொருத்தம்! ஒரு ஆண்டின் முடிவுதான் டிசம்பர் என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால், நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் முடிந்துபோனதும் இந்த மாதத்தில்தான்.

ஆழிப்பேரலை சுநாமியாகட்டும், ஜன்ம பூமி என்று சொல்லி வன்ம பூமியாக்கிய பாபர் பள்ளிவாசல் இடிப்பாகட்டும், அழிப்புக்காக இயற்கையும் மனிதனும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மாதமாக இருக்கிறது டிசம்பர். இதுபற்றி யாராவது ஆராய்ச்சி செய்வது நல்லது. அதை டிசம்பர் மாதம் தொடங்காமல் இருப்பது அவசியம்.

மேலே சொன்ன டிசம்பரில் நடந்தது என்ன?


குளிர்காலச் சூரியன் தாமதமாக உதித்தது அன்று. விடியல் நேரத்தில் ஃபைசாபாத் மாவட்டச் சிறையின் அதிகாரிகள் ஒரு இளைஞனின் உயிரை எடுப்பதற்கு ஆயத்தமாயினர். கயிறு, மணல் பைகள், இன்னபிறவெல்லாம் சரியாக உள்ளதா என்று தலைமைச் சிறை அதிகாரி வந்து கவனமாகப் பார்வையிட்டார். எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஏற்பாடுகளில் ஒரு குறையும் சொல்லமுடியாது. எல்லாவற்றையும் பார்வையிட்டபின் தனக்குக் கீழிருந்தவர்களை அழைத்து, ‘குற்றவாளியை இங்கே கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்.

ஒரு கைதியை அழைத்துவர பத்து ராணுவ வீரர்களோடு பாதுகாப்பாக அதிகாரிகள் சென்றனர். அன்றைக்கு சாக இருந்தவனின் சிறை அறைக்கதவு கடைசி முறையாக அவனுக்காகத் திறக்கப்பட்டது. கைதியோ சாதாரண ஆள் அல்ல. தேசபக்தன். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவன். அவன் தன் இறுதி அழைப்புக்காகக் காத்திருந்தான். அழைப்பு வந்தவுடன், ‘எல்லாம் தயாராக உள்ளதா?’ என்று கேட்டான்.

அவன் இறப்பதற்குத் தயாராக இருந்தான் என்பதை அவனுடைய குரலின் உறுதி காட்டியது. அவன் சொன்னதைக் கேட்டவர்களுக்குத்தான் ஒருமாதிரியாகிப் போனது. கொஞ்சம் சிரமத்துடன் அதிகாரி, ‘ஆமாம், எல்லாம் தயாராக உள்ளது’ என்றார்! தான் ஓதிக்கொண்டிருந்த குர்’ஆனை அந்த இளைஞன் மூடி தன் கைகளில் வைத்துக்கொண்டான். எழுந்து நின்று, ‘போகலாம்’ என்றான்.

ஆறடி உயரம். அகலமான மார்பு. இரும்பு உடல். சிங்க நெஞ்சம். அவனுடைய தாடி அவனுக்கு மேலும் அழகு கூட்டியது. அவன் உதடுகளில் ஒரு புன்னகை எப்போதுமே இருக்கும். இப்போதும் அது இருந்தது. கைகளில் விலங்குடன் அந்த இளைஞன், ராணுவ வீரர்களுக்கு மத்தியில் மிடுக்காக நடந்துசென்று, தனக்காக தயாராக இருந்த தூக்குமேடைக்குச் சென்றான். அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். தூக்கு மேடைக்கு அருகில் வந்தவுடன், இளைஞன் நடையைத் துரிதப்படுத்தினான். இரண்டே தாவலில் மேடைய அடைந்தான். விலங்குகளைக் கழற்றியதும், கையை நீட்டி தூக்குக் கயிற்றை தன்னை நோக்கி இழுத்து முத்தமிட்டான்.

தூக்குக் கயிறு அவனது கழுத்தைச் சுற்றியது. லிவரை அழுத்தியவுடன் அவன் நின்றுகொண்டிருந்த பலகை விலகியது. கீழே இருந்த குழிப்பகுதிக்குள் அவன் சென்றான். அவன் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. இறவாத இந்திய நாயகர்களின் வரிசையில் அவனும் சேர்ந்துகொண்டான்.

யார் அவன்? ஏன் அவனைக் கொன்றது ஆங்கிலேய அரசாங்கம்?

அவன் ஒரு கவிஞன். ஒரு புரட்சியாளன். இந்தியாவின் விடுதலைக்காகப் போரிட்டவன். உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஷாஜஹான்பூர் என்ற ஊரில் 1900-ல் அவன் பிறந்தான். மஹாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டங்களால் தூண்டப்பட்டான். எப்படியாவது இந்தியா, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை. எனவே, அதே ஊரில் பிரபலமான விடுதலைப் போராளியாக இருந்த ராம்பிரசாத் என்பவரோடு சேர்ந்து நாட்டுக்காக ரகசியமாகப் பணியாற்றினான்.

அவன் ராம்பிரசாத்தோடு சேர்ந்ததற்கு அதுமட்டும் காரணமல்ல. முக்கியமான காரணம், கவிதைதான்! ஆமாம். அவன் ‘வர்ஸி’, ‘ஹஸ்ரத்’ ஆகிய பெயர்களில் உருது மொழியில் கவிதைகள் எழுதினான். முஷாயிரா என்று சொல்லப்படும் உருது கவியரங்கங்களில் கலந்துகொண்டு பிரபலமானான். ராம்பிரசாத்தும் ஒரு கவிஞர். அவர் ‘பிஸ்மில்’ என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார். தன் அண்ணன் மூலமாகத்தான் பிஸ்மில் பற்றி அவனுக்குத் தெரியவந்தது. முதலில் தயங்கிய ராம்பிரசாத், பின்னர் ஒரு மூத்த சகோதரனைப்போல் அவனோடு பழகினார். கடைசிவரை.

ககோரி ரயில் கொள்ளை
தம் நடவடிக்கைகளுக்குப் போதிய பணமின்றி போராளிகள் கஷ்டப்பட்டனர். என்ன செய்யலாம் என்று யோசித்தனர். ஒரு குறிப்பிட்ட ரயிலில் அரசாங்கப் பணம் சென்றுகொண்டிருந்ததை ராம்பிரசாத் பார்த்தார். ஒருநாள், ஷாஜஹான்பூரில் இருந்து லக்னௌவுக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது அதை அவர் கவனித்தார். பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது. செயல்வீரர்களைக் கொண்ட கூட்டத்தில் திட்டம் விளக்கப்பட்டது. எல்லோரும் அதை வரவேற்றனர்.

ஆனால் அவன் மட்டும் எழுந்து நின்று, ‘நண்பர்களே, இது அவசர முடிவு. நம்முடைய பலம், அரசின் பலம் இரண்டையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சாதாரணக் கொள்ளையில் இவ்வளவு பணம் கிடைப்பதில்லை. எனவே, கொஞ்சமாக பணம் காணாமல் போனால் அதை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளாது. காவல் துறை பார்த்துக்கொள்ளட்டும் என்று இருந்துவிடும். ஆனால் அரசுக்குச் சொந்தமான பெரும் பணத்தை நாம் எடுக்கும்போது, அரசு யந்திரம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு நாம் தேடப்படுவோம். எப்படியும் பிடிபட்டுவிடுவோம். தண்டனையில் இருந்தும் தப்பிக்க முடியாது. நம் அமைப்பு அவ்வளவு உறுதியானதாக இன்னும் மாறவில்லை. எனவே இந்தத் திட்டம் வேண்டாம் என்று நினைக்கிறேன்’ என்று கூறினான்.

ஆனால் புரட்சியாளர்கள், உணர்ச்சியின் பிடியில் இருந்தனர். இளைஞன் சொன்னதன் பின்னால் இருந்த உண்மையை உணர அவர்களுக்கு அப்போது அவகாசமில்லை. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற முடிவுக்கே அவர்கள் வந்தனர். மாற்றுக் கருத்து சொன்னாலும் அமைப்பின் முடிவுக்கு அவன் கட்டுப்பட்டான்.

ரயில், ககோரி என்ற ஊரில் வந்து நின்றது. அதுவாக நிற்கவில்லை. போராளிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள். ஏன் ரயில் நின்றது, யார் நிறுத்தினார்கள் என்று விசாரிப்பதற்குள், தங்கள் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார்கள்.

ஆனால், பணம் இருந்த இரும்புப்பெட்டியை மற்ற போராளிகளால் உடைக்கவே முடியவில்லை. கடைசியில், அவன்தான் சம்மட்டி கொண்டு அடிமேல் அடிகொடுத்து அதை உடைத்து பணத்தை எடுக்க வழிகோலினான். அபரிமிதமான பணம் கிடைத்துவிட்டது.

ஆனால் ஒரு மாதம் கழித்து, அரசாங்கம் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையின் உதவியுடன், ராம்பிரசாத்தையும் மற்றவர்களையும் கைது செய்தது. அவன் மட்டும் பிடிபடவில்லை. அவன் பிஹார் சென்று அங்கே ஒரு கிளர்க்காக வேலை பார்த்தான். பத்து மாதங்கள் ஓடிவிட்டன. அங்கே நடந்த முஷாயிராவில் கலந்துகொண்ட அவனுடைய கவித்திறனைக் கண்டு, முதலாளி அவன் சம்பளத்தைக்கூட உயர்த்தினார்! இந்தக் காலகட்டத்தில் ஹிந்தியும் பெங்காலியும் கற்றுக்கொண்டான்.

ஆனால், இந்தத் தலைமறைவு வாழ்க்கை அவனுக்கு சலிப்பூட்டியது. வெளிநாடு சென்று இந்திய விடுதலைப்போருக்கு ஆதரவு திரட்ட எண்ணினான். டெல்லி சென்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டினான். தன் பள்ளிப்பருவ நண்பன் ஒருவனை அங்கு சந்தித்தான். அந்த நண்பன் இவனுக்கு சாப்பாடெல்லாம் வாங்கிக்கொடுத்து உபசரித்தான். இரவு 11 மணிக்கு மேல் தன் அறைக்குத் திரும்பிய இவனை போலீஸ் வந்து கைது செய்தது. விலைபோய்விட்ட பள்ளி நண்பனின் துரோகம்!

காவல் துறை அவனைத் தன் பக்கம் இழுக்க முயன்றது. வழக்கம்போல பிரித்தாளும் சூழ்ச்சிதான். தசத்துர் கான் என்ற ராணுவ அதிகாரியை அவனிடம் பேச அனுப்பியது. ‘ராம்பிரசாத் ஒரு ஹிந்து. ஹிந்துக்கள் அவர்களுடைய ராஜ்ஜியத்துக்காக போராடுகிறார்கள். நாம் எதற்காக அதில் கலந்துகொள்ள வேண்டும்?’ என்ற ரீதியில் அவனை மூளைச்சலவை செய்ய கான் முயன்றார். ஆனால், ‘கான் சாஹிப், ஆங்கிலேயர்களின் இந்தியாவைவிட, ஹிந்து இந்தியா மிகச்சிறந்ததாக இருக்கும்’ என்று கூறி அவர் வாயை அடைத்தான் அவன்.

தண்டனை


ராம்பிரசாத், ராஜேந்திர லஹரி, ரோஷன் சிங், நம் இளைஞன் நால்வருக்கும் தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ராம்பிரசாத்தும் அவனும், ஒரே நாளில் வேறு வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்டனர்.

    இறப்பு என்பது ஒருமுறைதான் வரும்
    அதைக்கண்டு ஏன் அஞ்சுகிறாய்?
    ஆங்கிலேயரின் கொடுங்கோலாட்சியில் நொந்துபோய் நாங்கள்
    ஃபைசாபாத் சிறையிலிருந்து நேராக
    சொர்க்கத்துக்கு நடந்து போகிறோம்
என்று கவிதை எழுதினான் நம் இளைஞன்!

‘நான் போனபிறகு சகோதரர்களும் நண்பர்களும் எனக்காக அழுவார்கள். ஆனால், நம் தாய்நாட்டை நேசிக்காமல், அதற்கு உண்மையாக இல்லாமல், அதைப்பற்றிய உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்களே என்பதற்காக நான் அழுகிறேன்’ என்கிறது அவனுடைய ஒரு கவிதை!

சிறையில் இருந்தபோதுகூட விடாமல் ஐவேளையும் தொழுகையை அவன் நிறைவேற்றினான். நோன்புகாலத்தில் நோன்பு பிடித்தான். தினமும் குர்’ஆன் ஓதும் பழக்கமும் அவனிடம் இருந்தது.

‘என் கைகளால் நான் யாரையும் கொல்லவில்லை. என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. அல்லாஹ் எனக்கு நீதி வழங்குவான்’ என்று சொல்லிவிட்டு, ‘லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்’ என்று இறுதியாக இஸ்லாத்தின் மூலமந்திரமான கலிமாவை ஓதிவிட்டுத்தான் அவன் தூக்குக் கயிறுக்கு கழுத்தைக் கொடுத்தான்.

அந்த இளைஞன் யார்? அவன் பெயர் என்ன?

அஷ்ஃபாக்குல்லா கான்
அவன் பெயர் அஷ்ஃபாக்குல்லா கான். இந்திய விடுதலைப் போராட்டம் என்றால் ஒரு சில பெயர்கள் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும். ஏனெனில், அவை திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக்கொண்டே இருப்பதால். ஆனால், அறியப்பட வேண்டிய எத்தனையோ அஷ்ஃபாகுல்லா கான்களும் ராம்பிரசாத் பிஸ்மில்களும் இருக்கின்றனர். மறக்கப்பட்ட இவர்கள்தான், வரலாறு படைத்த விடுதலை வரலாற்றின் நாயகர்கள்.

By நாகூர் ரூமி

Thanks to News Source:
http://www.dinamani.com/junction/varalaaru-padaitha-varalaaru/2015/04/14/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/article2762445.ece

Sunday, April 26, 2015

திருப்பூர் 'பனியன் நகரம்' ஆக வித்திட்ட சாகிப் சகோதரர்கள்

திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரியும் காட்சி (கோப்புப் படம்)
 
திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரியும் காட்சி (கோப்புப் படம்) 
 
இன்று பல்லாயிரக்கணக்கானவர்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன திருப்பூர் பனியன் கம்பெனிகள். இந்நிறுவனங்கள் இன்று பெருமளவில் உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வரலாற்றைப் பற்றி 'முகமற்றவர்களின் அரசியல்' என்ற புத்தகத்தில் கே.எம்.சரீப் எழுதியுள்ளார். 

இப்புத்தகத்தில் 22 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரச்சினையை அல்லது ஒரு புதிய செய்தியை முன்வைக்கிறது. 

கடற்கரையோர முஸ்லீம்கள் பற்றி
'நீண்ட கரையின் மிக நீண்ட கதை' என்ற கட்டுரையில் கடலோர முஸ்லிம் கிராமங்களைப் பற்றிய நாம் அறியாத பல செய்திகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமண சமயத்தை தழுவியவர்களாகவே இருந்தனர். தூய தமிழ் சொற்களான தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா போன்றவை சமணர்களின் மொழி வழக்கில் இருந்தவையே என்று ஒரு கட்டுரையில் ஒரு புதிய செய்தியை நமக்குத் தருகிறார். இன்னொரு கட்டுரையில், தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகத்தில் ஆண்களைவிட பெண்களே தற்போது அதிகம் கல்வி கற்போராக உள்ளனராம். மேல்நிலைக்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உயர்கல்வி என இச்சமூகத்தில் பெண்களே அதிகம் படிக்கிறார்கள் என ஒரு நல்ல புள்ளிவிவரத்தையும் தருகிறார். 

காவிரிப் பிரச்சனை குறித்து
இதில் காவிரி பிரச்சினையைப் பற்றியும் ஒரு செறிவான கட்டுரை உண்டு. நீராதாரப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அவர் சொல்வது நதிநீர் இணைப்பை மட்டுந்தான். நதிகள் தேசியமயமாக்கப்பட்டால ஒழிய எந்த தீர்வும் இங்கே ஏற்படப் போவதில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாவண்ணம் எல்லா நதிகளையும் ஒன்றிணைக்காவிட்டால் வேறு வழி எதுவும் ஏற்படப்போவதில்லை என்கிறார். 

தமிழ் சினிமா வரலாறு
இந்நூலில் ஆறு பக்கமே உள்ள ஒரு கட்டுரை தமிழ் சினிமா வரலாற்றைப் பற்றியது. ஆனால் மிகவும் அடர்த்தியானது. கீசக வதம் தொடங்கி புராண சினிமாவாக இருந்தது தமிழ் திரையுலகம். கல்கியின் 'தியாக பூமி'யிலிருந்து தொடங்கி நிறைய தமிழ்ப்படங்கள் பிரிட்டிஷ்க்கு எதிராக காங்கிரஸின் விடுதலைப் பிரச்சார படங்களாக வந்து வெற்றிநடை போட்டன. மக்களின் மனதின் சுதந்திரத் தீயை சுடர்விட்டு பிரகாசிக்க வைத்தன. 

பின்னரே வேலைக்காரி, பராசக்தி உள்ளிட்ட திராவிட இயக்கப் படங்கள் அடியெடுத்துவைத்தன. அடியெடுத்து வைத்ததோடு தமிழ் திரையுலகப் போக்கையே அதிரவைத்தன. தமிழக மக்கள் தங்களுக்கான முதல்வரை கோடம்பாக்கத்திலிருந்தே தேர்ந்தெடுத்ததன் வாயிலாக அதன் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. சரிவையும் ஏற்படுத்தின. சமீபத்தில் கடைசியாக கருணாநிதி குடும்பத்தினரின் அத்தனை நிதிகளும் இன்று கோடம்பாக்கத்தில் களம்இறங்கியுள்ளதையும் விமர்சிக்கிறார். 

காவிரிப் பிரிச்சினை, முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றிய பல கட்டுரைகளும் இதில் உள்ளன. இதில் உள்ள 'வரலாற்றை உருவாக்கியவர்கள்' கட்டுரை மிகமிக முக்கியமானது. பல்லாயிரக்கணக்கானவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனிகள் உருவாகக் காரணமாக இருந்தவர்களை அறிய உதவுகிறது. 

நான்கே நான்குப் பக்கங்களே உள்ள இக்கட்டுரையிலிருந்து சிற்சில பகுதிகள்...
குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி தன்னுடைய சகோதரர் சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டு பேபி நிட்டிங் கம்பெனி என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் தொழிற்சாலையை உருவாக்கினார் எம்.ஜி.குலாம் காதர் சாகிப். 

1935இல் அவர் கொண்டுவந்து சேர்த்த இயந்திரம் தலைசுத்தி மிஷின் என்றழைக்கப்பட்டது. பெரிய மாட்டு வண்டி சக்கரம்போல் இருந்த சக்கரத்தை இருவர் சேர்ந்து சுழற்ற வேண்டும். இதை மின்சாரத்தால் இயங்க வைக்க முடியாது. கையால் சுற்றித்தான் இயங்க வைக்க முடியும். மனித உழைப்பின்றி வேறு வழியில்லை. 

பனியன் சகோதரர்கள்
இரவில் பெட்ரோமாக்ஸ் லைட்டோடு இயந்திரத்தோடு இயந்திரமாய் மாறிப்போவார் குலாம் காதர் சாகிப். இயந்திரம் பழுதாகிப் போனது. பழுது பார்க்க கொல்கத்தா செல்ல வேண்டும். தாங்களே மெஷின் மேனாக ஆனார்கள் பனியன் சகோதரர்கள். இடையில் பின்னலாடை செய்யப் பயன்படும் ஊசிகள் உடைந்து போயின. அதேபோல ஊசியை கோவை வின்சென்ட் சாலையில் உள்ள மாரியப்பன் லேட் பட்டறை உதவியோடு புதிய ஊசிகளைத் தயார் செய்தனர். அன்றைய தென்னிந்தியாவில் மேல் சட்டை போடுபவர்களும் டிராயர் அணிபவர்களும் மிகக்குறைவு. 

இந்தியா முழுவதும்
துரைமார்களும் பெருந்தனவந்தர்கள் மட்டுமே அவ்வகை ஆடைகளை அணிந்தனர். 'அங்கராக்' எனப்படும் மேலாடையும் 'கோவணம்' என்ற கீழாடையும்தான் தேசிய உடைகளாக இருந்தன. பேபி நிட்டிங் தயாரித்த பனியன்கள் திருப்பூரைச் சுற்றியுள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் பனியன்களை அனுப்ப ஆரம்பித்தது இக்கம்பெனி. 

அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ஒரே வாகனப்பதிவு கிடையாது. ஒரு ஊரில் பதிவு செய்தால் அந்த வாகனத்தை வேறு ஊரில் இயக்க முடியாது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி வாகனங்களில் இந்தியா முழுவதும் பேபி நிட்டிங் கம்பெனியின் பனியன்கள் அறிமுகமாயின. 

15 ஆயிரம்கோடி அன்னியச் செலாவணி
சாதாரண இரண்டு இஸ்லாமியர்களால் தொடங்கப்பட்ட இந்த பனியன் தொழில் இன்றைக்கு இந்தயாவிற்கு 15 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித்தருகிறது. குலாம் காதர் சாகிப், சத்தார சாகிப் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை இன்றைக்கு திருப்பூரைப் பனியன் நகரமாக மாற்றி இருக்கிறது. எண்ணிலடங்கா தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளது. 

இன்றைக்கு பேபி நிட்டிங் கம்பெனி இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் திருப்பூர் என்கிற புதிய வரலாறு உருவாக அந்நிறுவனமும் அதை உருவாக்கிய எம்.ஜி.குலாம் காதர் சாகிப்பும், எம்.ஜி.சத்தார் சாகிப்பும் காரணமாக இருந்தனர். 

நூல் ஆசிரியர்: கே.எம்.சரீப், பக்: 135, விலை: ரூ.110.
நூல் வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.
தொலைபேசி: 9144 - 24993448. 

பால்நிலவன்

Thanks to News Source:

துபையில் 01.05.2015 வெள்ளி மாலை மவ்லவி அப்துல் பாசித் மார்க்க விளக்கவுரை நிகழ்ச்சி

சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல் மனார் சென்டர் - துபை நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 01-05-2015 வெள்ளி மாலை நடைபெற இருக்கின்றது. மௌலவி. அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். நிகழ்ச்சியின் POSTER இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதுசமயம் இந்நிகழ்ச்சிக்கு volunteers ஆக சேவையாற்ற தங்களை அன்புடன் அழைக்கின்றோம். தங்களின் வருகையை இந்த mailக்கு reply (with your name & mobile no) அனுப்பி உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் (Before 30-04-2015). அல்லாஹ் நம் அனைவரின் நற்காரியங்களுக்கு உதவி புரிவானாக! அங்கீரிப்பானாக!! ஆமீன்.

நிகழ்ச்சி நிரல்
நாள்: 01-05-2015 வெள்ளி
இடம்: அல்மனார் சென்டர் - அல் கூஸ் - துபை
வருகைதரும் நேரம்: மாலை 4:00 மணி (அஸர் தொழுகைக்கு அல்மனார் பள்ளிக்கு வந்துவிடவும்)
தொடர்புக்கு: Shahul 050-8480401 & Imran 056-4683350

Regards,
Admin
Al Manar Centre - Dubai.

Tuesday, April 21, 2015

துபையில் ஓர் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி (வரும் வியாழன் 23-04-2015 @ 09:30 PM)


அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

மாதாந்திர இஸ்லாமிய சொற்பொழ்வு நிகழ்ச்சியில்துபை MTCT சார்பாக இன்ஷாஅல்லாஹ் வரும் வியாழன்  23-04-2015 அன்று -இரவு 09:30 PM மணியளவில்   தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் நாச்சிக்குளம் M.L. அஸ்ரப்  அலி M.A.,B.L., அவர்களை கொண்டு ஓர் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஏற்பாடு செய்துள்ளோம்.

கேள்வி & பதில் நிகழ்ச்சி உண்டு.

எனவே அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

Friday, April 17, 2015

அதிரையில் கந்தூரி புறக்கணிப்பு (மறியல்?) போஸ்டரால் பரபரப்பு!


 
அதிரை காட்டு பள்ளி தர்ஹா கந்தூரிவிழாவினை பொதுமக்கள் புறகணிக்க வலியுறுத்தி அதிரை பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. 
 
Thanks to: adiraixpress

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு வெளிநாடு வாழ் அதிரையர்களை ஒன்றிணைத்து போராட முடிவு !

 
அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு வெளிநாடு வாழ் அதிரை சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்பான வேண்டுகோள்:

நமதூரில் ஒரு அரசு மருத்துவமனையும் 8 தனியார் மருத்துவர்கள் இருந்தும் இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பணி செய்கின்றனர், இத்தனை டாக்டர்கள் இருந்தும் இரவு நேரங்களில் ஏற்படுகின்ற அவசர சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவர்களையோ நேரடியாக சென்று அவர்களின் வீடுகளின் கதவுகளை தட்டினாலும் ஒரு சிலரை தவிர யாரும் வந்து பதில் தருவது கிடையாது. பகல் மற்றும் இரவு நேரங்களில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது வெறும் கேள்வி குறியாகவே இருந்து வருகின்றது, வீடுகளில்  இயற்கையாக மரணமடைபவர்களை நாடிபிடித்து பார்த்து சொல்வதற்கு கூட நமதூர் மருத்துவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை நாடிபிடித்து சொல்வதற்கு, வந்து செல்வதற்கு வாகனமும் அவருக்கான ஊதியமும் கொடுத்து அழைத்தாலும் யாரும் வருவது கிடையாது. பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றது. இது தான் அதிரையின் இன்றைய நிலை.

இது போன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபர் சமூக ஆர்வலர் ஒருவர் அபுதாபியிலிருந்து தமிழக முதல்வர், சம்பந்தபட்ட துறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் முதலில் மின்னஞ்சல் மூலம் மேற்காணும் கோரிக்கை மனு அனுப்பட்டது அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு அவை அனைத்தையும் பதிவு தபால் மூலமும் தொடர்ந்து கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கும் இன்று வரை பதில் இல்லை அடுத்த கட்டமாக தகவல் அறியும் உரிமைச்சட்டதின் கீழ் தகவல் கோர உள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவைகள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு தருகிறோம். இதை தனி நபர் முயற்சி செய்வதை விட இப்படி கூட்டு முயற்சி செய்தால் என்ன என்று என் மனதில் தோன்றியது.

வெளிநாடு வாழ் அதிரையர்கள் அனைவரும் யு.ஏ.யி, சவூதி, கத்தார், குவைத், மஸ்கட், அமெரிக்கா, ஜப்பான், லண்டன், போன்ற நாடுகளில் வாழும் நம் சக அதிரை சகோதரர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியன் எம்பஸி மூலம் தமிழக முதல்வர், சம்பந்தபட்ட துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களுக்கு  வெளிநாடு வாழ் அதிரையர்கள் சார்பாக ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்தால் இன்னும் கொஞ்சம் வீரியமாக இருக்குமென்று நான் கருதுகிறேன், ஒவ்வொரு மஹல்லாவாசிகளிடமும் அந்தந்த மஹல்லா நிர்வாகிகள் பொறுப்பேற்று கையெழுத்து வேட்டை நடத்தி ஒன்றிணைந்த குழுவாக சென்று இந்தியன் எம்பஸியில் கொடுக்க முன்வர வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இது தொடர்பான ஆலோசணைகளை பகிர்ந்து கொள்ள கீழ்க்காணும் எண்ணில் தினமும் மஃரிப் தொழுகைக்குப் பின் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தொடர்பு கொண்டு செய்திகளை பறிமாறிக் கொள்ள வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்,
அதிரை 'அல்மாஸ்' என்கிற 
K.M.N. முகமது மாலிக்
அபுதாபி
050 7914780

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு பெயர் சொல்ல விரும்பாத மேலத்தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அனுப்பி வைத்த கோரிக்கை மனுவின் விவரங்கள்:

 
   
 
Thanks to: Adirai News

Thursday, April 16, 2015

காட்டுப்பள்ளி கந்தூரி தொடர்பாக கோட்டாட்சியார் முன்னிலையில் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் கடும் நிபந்தனைகள் விதிப்பு !

காட்டுப்பள்ளி தர்கா கந்தூரி - அமைதிக் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள்

 
அஸ்ஸலாமு அலைக்கும்.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கையெழுத்திட்டு அறிவிப்புக் கடிதம் ஒன்று (ந.க 200 / 2015 அ 3 - தேதி 11.4.2015) அதிரை தாருத் தவ்ஹீதின் அமீருக்கும் செயலருக்கும் கட்ந்த 14.4.2015 அன்று வழங்கப்பட்டது.
 
அதிராம்பட்டினத்தில் கந்தூரி என்றாலே கந்தூரி எதிர்ப்பாளர்களாக அரசு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தாருத் தவ்ஹீதுக்குக் கோட்டாட்சியரிடமிருந்து அழைப்பு வந்துவிடும். இம்முறை நான்கு அமைப்பினருக்கு அழைப்பு வந்தது.

அமைதிக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்த 15.4.2015 அன்று கடைசி நேரத்தில், கூட்டம் தள்ளிவைக்கப் படுவதாகத் தகவல் வந்தது. வழக்கம்போல் கந்தூரிக்கான எதிர்ப்பைத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியருக்கு 13.4.2015 நாளிட்டுக் கடிதம் எழுதியிருந்தோம்.

மறுநாள் 16.4.2015 காலையில் மறு அழைப்பு வந்து, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாக கந்தூரிக் கமிட்டியினர் அங்கு வந்து குழுமியிருந்தனர். எஸ்டிப்பிஐ அமைப்பினர் வரவில்லை. த.மு.மு.க.வினர் வந்திருந்தனர். இறுதியாகத் ததஜவினர் வந்து சேர்ந்த பின்னர் 12 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

தொடக்கமாக, கந்தூரிக் கமிட்டியினரோடு கூடவே வந்து அமர்ந்த முத்துப்பேட்டை தர்கா ட்ரஸ்டி பாக்கர் அலியை வெளியேற்றுமாறு அதிரை தாருத் தவ்ஹீதின் துணைத் தலைவர்  ஜமாலுத்தீன் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறுமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

ம்றைந்த கோல்டன் நிஜாமும் இதுபோல் ஒருமுறை வெளியேற்றப்பட்டது நினைவுக்கு வந்தது.

பின்னர் இரு தரப்பினரின் கருத்துகளையும் கோட்டாட்சியர் கேட்டார். கந்தூரியால் விளையும் தீமைகளையும் அனாச்சாரங்களையும் பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் எழுதிய கடிதத்தின் நகலைக் கோட்டாட்சியருக்கு வழங்கி, அக்கடிதத்தின் சாரத்தையும் செயலர் விளக்கினார். அத்துடன், காட்டுப்பள்ளி கந்தூரியை ஒரு காலத்தில் மேலத்தெருவினரும் கீழத்தெருவினரும் இணைந்து நடத்தியதில் இரு தெருவினருக்கும் கந்தூரியின்போது வெட்டு, குத்துகள் நடந்தேறி, யார் கந்தூரி நடத்துவது? என்ற் கேள்வியோடு நீதிமன்றம் வரை சென்று, தெருவுக்கு ஓர் ஆண்டு எனத் தீர்ப்பான பழைய வரலாறும் எடுத்துக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 526ஆவது ஆண்டு கந்தூரி, இந்த ஆண்டு நோட்டீஸில் 756ஆம் ஆண்டு கந்தூரியான எப்படி என்றும் கேள்வி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு கீழத்தெருவினருக்கான முறை வந்தும், கீழத்தெரு ஜமா அத்தினர் கந்தூரி எடுக்க மாட்டோம் என மறுப்புத் தெரிவித்து, கந்தூரித் தீமையிலிருந்து விலகிக் கொண்டுத் தீர்மானம் நிறைவேற்றியதும் கோட்டாட்சியருக்குச் சுட்டிக் காட்டப்பட்டது.

கடற்கரைத் தெருவில் கடந்த  நவம்பர் 2014இல் நடைபெற்ற கந்தூரியின் ஊர்வலம் மற்றும் கூடு சுற்றல் இரவின்போது நடந்தேறிய விதி மீறல்கள் அராஜகங்கள் பற்றி ததஜவின் அன்வர் அலீ விவரித்து, இஸ்லாத்துக்கு எதிரான கந்தூரியை எதிர்ப்பதற்கான காரணங்களை விளக்கினார். முத்துப்பேட்டை பாக்கர் அலி, அதிராம்பட்டினத்தாரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, ஆதாயம் அடையப் பார்ப்பதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பததாகவும் ததஜ அன்வர் அலீ கூறினார்.

கந்தூரிக் கமிட்டியினர், அவர்களின் தொன்மைப் பாட்டான, "காலங் காலமாக எடுத்து வரும் கந்தூரி" என்பதையே வளைந்து, நெளிந்து, குழைந்து பலமுறை சொல்லிக் கொண்டிருந்தனர். சலிப்படைந்த கோட்டாட்சியர், ஒரு கட்டத்தில், "இந்த விழா இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லாதபோது, அதைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வதுதான் நல்லது" என்று அறிவுரை கூறினார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் கடந்த 9.5.2013 அமைதிக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய வேறொரு கோட்டாட்சியர், "கந்தூரி விழா கொண்டாடுவதற்கு உங்க வேதத்திலிருந்து ஒரு சூரா ஆதாரம் சொல்லுங்க" என்று கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் அப்போதைய கந்தூரி கமிட்டியினர் தலைகுனிந்ததும் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் அமைதியாகக் கந்தூரி நடத்துவோம்" என்று கந்தூரிக் கமிட்டித் தலைவர் சேக் தாவூது கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த த.மு.மு.க. அஹ்மது ஹாஜா, அமைதியாகக் கந்தூரி நடத்துவோம் என்ற உறுதி கொடுக்கப்பட்ட அதே காட்டுப்பள்ளி ஊர்வலத்தில், தான் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதையும் அவ்வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிககை 96&97/2012யின் கீழ் இன்னும் வழக்கு நடந்து வருவதாகவும் விவரித்து, ஊர்வலம் என்பதே உள்நோக்கத்தோடு (ஹிடன் அஜண்டாவாக) நடத்தப் படுவதுதான் உண்மை என்றார்.

இன்னும் பல்வேறு விளக்கங்களுக்குப் பின்னர், கீழ்க்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, எழுதிக் கையெழுத்துகள் பெறப்பட்டன:


 
இந்த அமர்வின் தீர்மானங்கள் பழைய தீர்மானங்களையும் உள்ளடக்கும் என்பதோடு ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகளில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பகுதியையும் இன்றைய தீர்மானத்தில் கூடுதலாக நான் சேர்த்திருக்கிறேன் என கோட்டாட்சியர் வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

உளத் தூய்மையுடன் எடுக்கப்படும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு வெற்றியைத் தருவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனையே நாம் சார்ந்திருக்கிறோம்.
 




காட்டுப்பள்ளி கந்தூரி எதிர்வரும் 17-04-2015 அன்று கொடிமரம் நடும் விழா நிகழ்ச்சியும், 20-04-2015 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 30-04-2015 அன்று சந்தனக்கூடு விழா நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கந்தூரி விழா தொடர்பாக விழா கமிட்டியினருக்கும், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளதென கருதி, இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியார் முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

இதில் கந்தூரி விழா கமிட்டியினர், தாருத் தவ்ஹீத் அமைப்பின் நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அதிரை கிளை நிர்வாகிகள், அதிரை காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
1. ஊர்வலம் காட்டுப்பள்ளி தர்ஹாவில் 4.30 மணிக்கு தொடங்கி, அதிரையின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று, இரவு 7 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.

2. ஊர்வலம் தொடங்கும் போதும், முடிக்கும் போதும் சிறிதளவு சப்தம் வரக்கூடிய பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வல வழியில் எந்த இடத்திலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

3. மேலத்தெரு அல்பாக்கியதூஸ் சாலிஹாத் பள்ளிவாசல், நடுத்தெரு, புதுமனைத்தெரு, சி.எம்.பி லேன், ஆஸ்பத்திரி தெரு ஆகிய பகுதிகளில் ஊர்வலம் செல்லக்கூடாது.

4. விழா குழுவினர் கந்தூரி ஊர்வலத்தில் பங்கேற்று செல்லவேண்டும்.

5. ஊர்வலத்தில் கொடி, பள்ளாக்கு, 5 உருப்படி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உருப்படிக்கும் 10 மீட்டர் இடைவெளியில் செல்ல வேண்டும்.

6. தொழுகை பள்ளிவாசல்களுக்கு முன்னும் பின்னும், 100 மீட்டர் இடைவெளியில் வாத்திய இசை குழுவினர் இசைக்க கூடாது.

7. ஊர்வலத்தில் முன்னும், பின்னும் சிறியவர், பெரியவர்கள் ஆடி, பாடி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

8. எதிர்தரப்பினர் சட்டம் ஒழுங்கு எங்களால் பாதிக்கப்படாது எனவும், கந்தூரி விழாவிற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்தனர்.

9. விழாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அசம்பாவிதம் ஏற்படுமாயின் விழா குழுவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது.


Sunday, April 12, 2015

இஸ்லாமிய சிறுமிகளுக்காக உலகக் கல்வியுடன் ஆலிமா பட்டம் !

 
CMN சலீம் அவர்களின் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலில் அன்னை கதீஜா அகாடமி புதிதாக மார்க்க கல்வியுடன் (ஆலிமா) தரமான உலகக் கல்வி கற்றுக்கொடுக்கும் நோக்கில் புதிதாக தாருஸ் ஸலாம் என்ற பெயரில் பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை உருவாகியுள்ளது.

மாணவிகளின் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதிரையிலிருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 
அன்னை ஹதீஜா அகாடமி
அலைப்பேசி : 95787 61164 / 99438 91221

தகவல்: 'அல்மாஸ்' அப்துல் மாலிக்
Thanks to: Adirai News

பாவங்களை அள்ளித்தரும் கந்தூரி விழாக்கள்

கடந்த 10.04.2015 வெள்ளியன்று ADT அமைப்பினரால் அதிரையில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம்


Thursday, April 9, 2015

இது எனது உரிமை!


بسم الله الرحمن الرحيم


ஹிஜாப்  என் கண்ணியத்தின் கவசம்..
==========================================

ஹிஜாப் ஏன் அணிகிறீர்கள்?
 
எத்தனை அழகாக இருக்கிறீர்கள் ஆனால் அத்தனையும் மூடி மறைத்துவிடுகிறீர்களே! இது உங்களுக்கான விலங்காக தோன்றவில்லையா? [துபையில் மேடை நிகழ்வொன்றின் சந்திப்பில்] எனக்கேட்ட என் அன்பு மாற்றுமத சகோதரிக்கு,

 ”எனதான பதில் அனைவருக்குமானதாய்”
====================================================================

பிறப்பாலும் வளர்ப்பாலும் நான் ஒரு முஸ்லீம்,இஸ்லாத்தின் கடமைகளை அறிந்து அதன்படி நடக்கவும் செயலாற்றவும் கற்றுத்தரப்பட்டவள், சுதந்திரம் எது? விலங்கு எது? என பிரித்தறியும் திறனையும் இறைவனால் வழங்கப்பெற்றவள். மூடியிருப்பது உடலையே தவிர மூளையை அல்ல! இது என் முயற்சியின் முட்டுக்கட்டையுமல்ல!  எனது அழகும் அலங்காரமும் எனக்கும் என்னவருக்கானது மட்டுமே தவிர, எவருக்குமானதல்ல, என்னழகோ என் உடையோ பிறரைக்கவர்ந்து அவரை நான் பாவத்தின்பக்கம் ஈர்ப்பதற்கு நான் ஈனப்பிறவியுமில்ல.

இது விலங்கல்ல! எனக்கான சுதந்திரம், இச்சுதந்திரத்தால் ”நான் நானாக இருக்கிறேன்” எனது கம்பீரமும் கண்ணியமும் ஐயத்தெளிவும் இதிலுள்ளதென பெருமைப்படுகிறேன், பெண் அழகோ அழகற்றோ எப்படி இருந்தாலும் அவளின் பெண்மை களவாடப்படுகிறது . இதனை நான் அணிந்து செல்கையில் புரையோடிக்கிடக்கும் பிறமன புழுக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதாய் உணர்கிறேன், அதுபோதாதா?

கற்பழிப்புகள் மட்டுமே மான அவமான கணக்கில் கொள்ளப்படுகிறது அதுமட்டுமில்லை, பெண்ணின் அரைகுறை ஆடைகளின் வழியே அங்கங்களை அணுஅணுவாய் அளக்கும் கண்ணூசிப் பார்வைகளால் துளைக்கப்படுவதை ரசிக்கப்படுகிறதென்ற பெயரில் ஆசைகொள்வதும் அதன்வழியே இச்சைகொள்[ல்]வதும் அதனால் இச்சமூகம் சீரழிவதும் குற்றக்கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என்பதே வேதனை.

மாணிக்கத்தை தன்வாயின் அலவுகுள் பாதுகாக்கிறதே பாம்பு எதற்கு? அதன் மதிப்பறிந்துதான். உலகம் அழகானது ஆனால் அதில் உலவும் மனிதமனங்கள் அசுத்தம் படிந்தது, சற்று குறுக்கு புத்தியிலானது, குறுக்கில் சறுக்கி அலங்கோலமாக வாழ்வதைவிட, அழகியமுறையில் ஆத்மார்த்தநிலையில் என்னை நேர்ப்படுத்தும் முயற்சியாய் வாழ்வதே சிறப்பாக எண்ணுகிறேன், பாதுகாப்பின் அவசியத்தை உள்ளார்ந்து  எனது கண்ணியமும் பாதுகாப்பும் ஹிஜாப்பில் இருப்பதாய் உணர்ந்து நான் மாணிக்கமாகவே இருக்க விரும்புகிறேன்,

எத்தனைதான் பெண்ணியம்பற்றி பேசினலும் பெண் என்றைக்குமே பெண்தான் அவள் மேன்மைதான், பெண்ணால் எல்லாம்முடியும் ஆனால் அவள் ஆணாக முடியாது, அவன்போல் வெளிநடப்புக்கூடாது என்பதில் எனக்கு எவ்விதமாற்றுக் கருத்துமில்லையென தெரிவிப்பதோடு, பெண்மைக்குத் தேவையான சுதந்திரமளித்து பாதுக்காக்கும் ஒரு அழகிய வழித்தோன்றலில் நானும் ஒருபெண்ணாய் பிறப்பெடுத்தமைக்காக மிகவும் பெருமைப்படுகிறேன், ஹிஜாப் எங்களுக்கான விலங்கல்ல பெண்களுக்கான சுதந்திரம்- என்றுசொல்லி முடிக்கிறேன்.........

 //மன எண்ணங்களையும் மற்ற விசயங்களையும் எடுத்துரைத்து விளக்கம்தர எழுத்தறிவை தந்துதவிய ஏகயிறைவனுக்கும்,மிக அவசியமான கேள்வியெழுப்பி என் உணர்வுகளை வெளிகொண்டுவர உதவிய உடன்பிறவா சகோதரி மேனகாவுக்கும்.இஸ்லாமிய பெண்மணிதளத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.//


இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்