உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, May 31, 2013

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? படம் பார்த்த பிரமுகர்கள் கருத்து !

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படம் பார்க்க ஆவலா? பார்த்த பிரமுகர்கள் என்ன சொல்றாங்கன்னு பாருங்களேன்! படம் பார்த்த பிரமுகர்கள் கருத்து !

Monday, May 27, 2013

தந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?

கடந்த 23.05.2013 வியாழன் பின்னேரம் இரவு 8 மணியளவில், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மைய சகோதரர்களால் 'தந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?' பெயரில் ஓர் ஆவணப்படம் துபை மாநகரின் பர்துபை பகுதியில் சிறப்பு அழைப்பாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.



நேற்றைய இஸ்லாமிய அழைப்பாளர்களின் இன்றைய தடம் வேறு என வேகவேகமாய் பலரும் நாள்தோறும் மாறிக் கொண்டிருக்கையில் 1920 முதல் 1973ல் இறக்கும் வரை ஒரே கொள்கையை ஏனைய மதங்களுக்கு மாற்றாக முன்வைத்து ஒடுக்கப்பட்ட மக்களை இஸ்லாத்தை நோக்கி ஓயாமல் அழைத்தவர் தந்தை பெரியார் என்பது வழமைபோல் வரலாற்றில் புதைந்திருக்கும் உண்மை. இந்த ஆவணப்படம் மூலம் அவ்வரிய பல உண்மைகளை ஆய்ந்து, ஆதாரத்துடன் நமக்குத் தருகிறார் பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள்.

பெரியாரின் அரிய ஆடியோ பதிவுகள் மற்றும் அய்யா ஆனைமுத்து அவர்களின் வரலாற்று தொகுப்புக்களிலிருந்து குறிப்புக்களை எடுத்தாண்டு எடுக்கப்பட்டுள்ள இவ்வாவணப் படத்தின் மூலம் இஸ்லாம், இறைவன் குறித்த தந்தை பெரியாரின் தெளிவான உயரிய சிந்தனைகளை அறிய முடிகிறது. நாத்திகமே பகுத்தறிவு என சுட்டப்படும் இவ்வேளையில் இஸ்லாத்தை ஆத்திக பகுத்தறிவு என்று அன்றே அடையாளமிட்டு ஓர் புரட்சிகர சிந்தனையை விதைத்துச் சென்றுள்ளார் தந்தை பெரியார். 

கடவுளை கற்பித்தவனை, உண்டாக்கியவனை, தான் உண்டாக்கிய கடவுளை நம்புகிறவனை, பரப்புகிறவனை, மூடநம்பிக்கைகளை சாடும் பெரியார் இஸ்லாமிய கடவுட் கோட்பாடு குறித்தும், முஸ்லீம்கள் இறைவனை எவ்வாறு நம்புகிறார்கள் என்பது குறித்தும் மிகவும் உயரிய எண்ணம் கொண்டிருந்துள்ளார் மேலும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் செய்யும் மூடச்சடங்குகளை, ஓர் உயரிய மார்க்கத்தில் இருந்து கொண்டு இதை செய்கின்றீர்களே என்றும் அன்போடு கடிந்து கொண்டுள்ளதன் மூலம் தூய இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் பெயரால் சிலர் செய்யும் தவறுகளையும் தெளிவாக பிரித்தறிந்து புரிந்து கொண்டிருந்திருக்கின்றார் தந்தை பெரியார்.



இவ்வாறாக, இவ்வாவண திரைப்படத்தின் சிறப்புகள் குறித்தும், பெரியாரின் இஸ்லாமிய அழைப்பு பணி குறித்தும், இஸ்லாத்தை தந்தை பெரியார் திராவிட மதமாக போற்றியது குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும், இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து என திராவிட இயக்க மேடைகளிலிலேயே அதிகம் அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.

மேலும் திரையிடலுக்குப்பின் நடந்ந நிகழ்வில் திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்த பேரறிஞர் அ.க.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் தமிழ் மொழியாக்க திருக்குர்ஆனை படித்து பின் அணிந்துரை வழங்கியது போன்ற தந்தை பெரியாரின் அரிய வரலாற்று துளிகள் நினைவு கூறப்பட்டது.

இந்த ஆவணப்படம் சமீபத்தில் சென்னையில் திரையிடப்பட்ட போது இஸ்லாமிய, நாத்திக மற்றும் இந்து மத சகோதரர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது என்ற போதும் இத்திரைப்படம் நகரங்கள், கிராமங்கள் என திரையிடப்பட்டு ஒவ்வொருவரையும் பெரியாரின் இஸ்லாமிய அழைப்பு சென்றடைய வேண்டும் எனவும் தேவையேற்படின் மொழிமாற்றம் செய்யப்படவும் நம் அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர்நோக்கியுள்ளனர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையத்தினர். 



இரண்டு வருட உழைப்பில் உருவான இந்த ஆவணப்படம் இதுவரை சிறப்புப் பார்வையாளர்கள் என்ற அளவில் மட்டுமே ஆங்காங்கே திரையிடப்பட்டு வருகிறது இதுமேலும் விரிவடைந்து தலித் சமூக மக்கள், நாத்திக நண்பர்கள் என அவர்களின் இல்லங்களின் அருகே திரையிடப்பட்டு அவர்தம் உள்ளங்களில் மாற்றங்கள் ஏற்பட, தூய இஸ்லாம் அனைத்து மக்களிடமும் சென்றடைய இருகரமேந்தி ஏக இறைவனை பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

அமீரகம் வாழ் சகோதரர்கள், தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கிட சகோதரர் கீழை ஜமீல் அவர்களை 050 4985037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

சென்னையில்
சகோதரர் செங்கிஸ்கான் 0091 9976885917
மவ்லவி இப்ராஹிம் காசிமி
பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

இறுதியாக, சென்னை திரையிடலில் கலந்து கொண்ட இந்து மத சகோதரர் ஒருவர், தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று தலித் மக்கள் அன்றே இஸ்லாத்தில் இணைந்திருப்பார்களேயானால் தர்மபுரி, மரக்காணம் போன்ற கலவரங்கள் இன்று நிகழ்ந்திருக்காது என தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த வகையில் தந்தை பெரியாரின் அழைப்புப் பணியை ஏற்காத தலித்துகளும், பயன்படுத்திக் கொள்ளாத முஸ்லீம்களும் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம்.

இக்குறைதனை போக்கிட இந்த ஆவணப்படத்தினை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்திட கரம் கோர்ப்போம் வாருங்கள்.

அதிரைஅமீன்

Tuesday, May 14, 2013

கடற்கரைத்தெருவில் ADT நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா !

 
இன்று [ 14-05-2013 ] இரவு 7 மணியளவில் அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் அதிரை தாருத் தவ்ஹீதின் [ADT] சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ADTயின் அங்கமாகிய அதிரை இஸ்லாமிக் மிஷன் [ AIM ] நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா இனிதே நடைபெற்றது.

 





 
கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர். பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்ட காயல்பட்டிணம் அன்னை ஆயிஷா சித்தீக்கியா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் 'இஸ்லாமிய கல்வியின் அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகுரிய ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.
 
Thanks to: Bro. Shaikana Nijam

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அதிரை கடற்கரைத் தெரு (மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி) ஜமாத்தினர் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-5-2013 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கல்வி நிபுணர்கள்:

CMN. சலீம் MA, அவர்கள்,
தாளாளர்,அன்னை கதீஜா மகளீர் கல்லூரி
அம்மாபட்டினம்.
தலைவர், சமூகநீதி பேரவை

ஆளூர்‍- ஷாநவாஸ்
(புதிய தலைமுறை தொலைக்காட்சி)

சிறப்புரை வழங்க உள்ளார்கள்...

நமதூர் மாணவ, மாணவியர்களின் கல்வி நலன் கருதி அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு ஏற்பாடு செய்துள்ளனர். அனைவரும் கல‌ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: அதிரை கடற்கரைத் தெரு மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி எதிர்புறம்

இங்ஙனம்
அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு

Monday, May 13, 2013

அதிரையில் ADTயின் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அதிரையில் ADTயின் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ், 14.05.2013 செவ்வாய் மாலை 6 மணியளவில், அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] அங்கமாகிய அதிரை இஸ்லாமிக் மிஷன் [AIM] ஆண்டுதோறும் நடத்தி வரும் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பரிசளிப்பு விழாவும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

இடம்: கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளி மைதானம்

நிகழ்வுகள்

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் பயின்ற மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் மற்றும் சிறந்த மாணவமணிகளுக்கான பரிசு வழங்குதல்

சிறப்புரை

மவ்லவி. அப்துல் மஜீத் மஹ்லரி
(முதல்வர், அன்னை ஆயிஷா சித்தீக்கியா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, காயல்பட்டிணம்)



தலைப்பு
இஸ்லாமிய கல்வியின் அவசியம்

நிகழ்ச்சி ஏற்பாடு 
அதிரை தாருத் தவ்ஹீத் ADT

அனைவரையும் குடும்பத்தோடு வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.

Thursday, May 9, 2013

அதிரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள் !


அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்று மாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கந்தூரிக் கமிட்டியினருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் விபரங்கள் தொகுக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவாக வரும்.

பேச்சுவார்த்தையின்போது, கந்தூரிக்குப் பொதுமக்கள் ஆதரவு பெருவாரியாக இருப்பதாகவும் எங்களைப் போன்ற நாலைந்து பேர்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் க.கமிட்டியின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

அது போலியானது என்பதை உணர்த்த கந்தூரியை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அரிய வாய்ப்பு.

கீழ்க்காணும் மாதிரி மின்னஞ்சல் அல்லது உங்களுக்குத் தோன்றுவதை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதி,  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளான

collrtnj@nic.in, மற்றும் spthanjavur@yahoo.com

எனும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாதிரி:
______________

SUBJECT: REQUEST TO BAN KANDURI IN ADIRAMPATTINAM.

Dear Sir,

Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.

Thanks,
______________

கந்தூரியை வீழ்த்த வேண்டுமாயின் அதன் பொருளாதார வேரைப் பிடுங்க வேண்டும்.

(1) கந்தூரி என்பது ஹராம் என்று நம்புபவர்கள், கந்தூரி வசூல் எனக் கேட்டு யார் வந்தாலும் ஹலால் சம்பாத்தியப் பணத்தை ஹராமுக்குக் கொடுப்பதை ஹராமாக்கிக் கொள்ளவேண்டும்.

(2) மலிவு விலையில் சாமான் வாங்கப் போவதாகக் கந்தூரிக்குக் கடைக்குச் செல்வதற்குக் காரணம் கூறுபவர்களிடம், சற்றே விலை கூடுதலாக இருந்தாலும் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டிலும் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஈட்டியைச் சரியான இலக்குக்கு எறிந்தால் மட்டுமே இன்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.

உறுதியுடன் முயல்வோம்; அல்லாஹ் துணை நிற்பான்.

ஜஸாக்கல்லாஹு கைரா!

SEC-ADT

அதிரை காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டியினருக்கு ADT கடிதம் !

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 25.4.2013 தேதியிட்டு, காட்டுப்பள்ளி கந்தூரிக் கமிட்டியினருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஒரு மடல் எழுதி, அதைக் கமிட்டியினர் அனைவரையும் நேரில் சந்தித்துக் கொடுப்பதற்குக், கமிட்டியின் பொருளாளர் (துரியான்) ஷேக் தாவூது அவர்களைத் தொலைத் தொடர்பு கொண்டு நேரம் கேட்டிருந்தோம்.

பல நாட்களில் பல நேரங்கள் தந்தும், தந்த நேரத்தை உறுதி செய்து கொள்வதற்குப் பலமுறை முயன்றபோது அடுத்த நாள்/நேரம் கொடுக்கப்பட்டு, தொலைபேசியில் அழைத்து உறுதி செய்வதாக வாக்களிக்கப்பட்டும் ஒருமுறையேனும் நம்மை அழைக்கவில்லை.

இறுதியாகக் கடந்த 1.5.2013 புதன்கிழமை மாலை கீழத்தெரு சங்கத்தில் கந்தூரிக் கமிட்டிப் பொருளாளரை நேரில் சந்தித்துக் கேட்டபோது 3.5.2013 வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னர் நமக்கு நேரம் ஒதுக்கியதாகத் தெரிவித்தார்.

அதுவும் நழுவிப் போனது. தொடர் மறுதலிப்புகள் நம்மைச் சந்திக்க, கந்தூரிக் கமிட்டியினருக்கு விருப்பம் இல்லை என்பதை உணர்த்தியது.

எனவே, அடுத்தநாள் 4.5.2013 அன்று காலை கந்தூரிக் கமிட்டி உறுப்பினர் (மான்) நெய்னா முஹம்மது அவர்களிடம் அதிரை தாருத் தவ்ஹீதின் மடலைக் கொடுத்து, கந்தூரிக் கமிட்டியினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

---------------
அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியருக்கு அதே 4.5.2013 நாளிட்டு கந்தூரியை நிறுத்துவதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் மடலொன்று அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் எழுதப்பட்டது. அது தனிப்பதிவாக வரும், இன்ஷா அல்லாஹ்.

ஜமீல் M.ஸாலிஹ்
செயலாளர்
அதிரை தாருத் தவ்ஹீத்

Thanks to adirainirubar

ADT யின் அங்கமாகிய 'இஸ்லாமிக் மிஷன்' நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் !

அதிரை தாருத் தவ்ஹீத்தின் [ ADT ] அங்கமாகிய 'இஸ்லாமிக் மிஷன்' ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் நடத்துகின்ற பள்ளி - கல்லூரி மாணவ / மாணவியருக்கான இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த [ 05-05-2013 ] அன்று முதல் CMP லேனில் அமைந்துள்ள AL மெட்ரிக் பள்ளியில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதில் ஏராளமான மாணவ, மாண‌விகள் சேர்ந்து நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் ப‌யின்று வருகின்றனர். மாணவ / மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.






 
'இதன் நிறைவு நாளான்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் நல்லொழுக்கப் பயிற்சியில் பங்கு பெற்ற மாணவ / மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பரிசளிப்பும் நடைபெறும்' என ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
Thanks to: Mr. Shaikana Nijam