உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

மர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்

அழிக்கப்படவேண்டிய அனாச்சாரங்கள் - ஹுஸைன் மன்பயீ

முஹம்மது ரசூலுல்லாஹ் - நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள்

நபி வழி என்பது என்ன? - ரஹ்மதுல்லாஹ்

ஈமானிய உறுதி - ஹுஸைன் மன்பயீ

Tuesday, March 7, 2017

அதிரையில் நாளை (09.03.2017) ADT வழங்கும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ், அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் அதிரையில் நாளை(வியாழன்) மஃரிப் தொழுகையை தொடர்ந்து தக்வா பள்ளி முக்கத்தில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், சகோதரர் ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்து கொண்டு'நபி வழி என்பது என்ன?' என்ற தலைப்பிலும்,

மவ்லவி. ஹீசைன் மன்பயீ அவர்கள் 'அழிக்கப்பட வேண்டிய அனாச்சாரங்கள்' என்ற தலைப்பிலும் மார்க்க விளக்கவுரை நிகழ்த்தவுள்ளனர்.

குறிப்பு: 

1. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

2. தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று பகல் ALM ஜூம்ஆ பள்ளியில் ஜூம்ஆ குத்பாவும், மாலை அஸர் தொழுகைக்குப் பின் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்களுக்கான வாராந்திர பயானிலும் கலந்து கொண்டு மவ்லவி. ஹூசைன் மன்பயீ அவர்கள் உரையாற்றுவார்கள்.

அனைவரையும் அன்புடன் வருக! வருக!! ன வரவேற்கிறது

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம்

Thursday, November 17, 2016

மோடியால் அவதியுறும் வெள்ளைப்பண வெளிநாடுவாழ் இந்தியர்கள்மோடியின் திட்டம் அடித்தட்டு இந்தியர்களின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால் நாடே திவலாகும் நிலைக்கு தள்ளப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். சாமானிய இந்தியர்களின் அன்றாட வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது குறித்து செய்திகள் வாயிலாக அறிந்து கொள்வதை விட மக்களே அனுபவரீதியில் பெற்றுவருகின்றனர் என்பதால் வெள்ளைப்பண இந்தியர்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என்ற கேள்வியை மட்டும் இங்கு வைப்போம்.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசுகளால் இந்தியர்களுக்கு வேலைவழங்க துப்பில்லாமல் போனதால் வேறு வழியின்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்குள் தள்ளப்பட்டவர்கள் நாம் அதாவது இந்திய பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் அந்நியச் செலாவணி என்னும் பாலை விட வெண்மையான வெள்ளை பணத்தை மட்டுமே ஈட்டித்தருபவர்கள் நாம் என்றாலும் நமக்கான உரிய மரியாதையை, நம்மையும் இந்தியர்களாக மதிக்கும் போக்கை காணவே முடியவில்லை.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என்ற சுகம் நம்மைப் போன்ற தகுதிவாய்ந்த இந்தியர்கள் விட்டுத்தந்து வெளிநாட்டுக்குச் சென்றதால் கிடைத்த வாய்ப்பு என்பதை உணர்வார்களேயானால் விமான நிலையங்களில் நம்மிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்வற்கு அவர்கள் வெட்கப்படுவர்.

சரி வெள்ளைப்பணத்திற்குள் மீண்டும் வருவோம், நாம் வெளிநாட்டில் ஈட்டும் பொருளாதாரம் முழுக்க முழுக்க வெள்ளையே அன்றி வேறில்லை. இந்நிலையில் கம்பெனிக்காரன் இரக்கப்பட்டுத் தரும் சொற்ப நாள் விடுமுறையில் ஊருக்கு வரும் நாம் வெளிநாட்டு கரன்சியை இந்தியாவிற்குள் முழுமையாக மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது அல்லது நமது வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டுச் சென்றாலும் இயங்காத ATMகளிலிருந்து நமது வெள்ளை பணத்தை எடுக்க முடியாது, ஒருவேளை ATM இயங்கினாலும் தினம் 2 ஆயிரத்திற்கு மேல் நமது வெள்ளை பணத்தை எடுக்க முடியாது. 

வேறுவழியின்றி வங்கியில் மாற்றச் சென்றாலும் 2 ஆயிரத்திற்கு மேல் மாற்ற முடியாது அதுவும் விரலில் மை வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதால் டிசம்பர் இறுதி வரை மறுபடியும் ஒருமுறை நமது வெள்ளைப்பணம் 2 ஆயிரம் ரூபாயை கூட எடுக்க முடியாது. இதில் எத்தனையோ தலையாய பிரச்சனைகளை இந்த விடுமுறை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என வேறு திட்டமிட்டு சென்றிருப்போம்.

நம் அன்றாட வாழ்வில் கலந்துள்ள பால்காரரிடமோ, காய்கறிகாரரிடமோ, மீன் வியாபாரியிடமோ, சிறு மளிகைக்கடைகாரரிடமோ நாம் வங்கிப் பரிவர்த்தணை அடிப்படையில் வியாபாரம் செய்வது என்பது கனவில் கூட சாத்தியமில்லாததுடன் இலவச இணைப்பாய் மருந்தும் மருத்துவமும் தினசரி வாழ்வின் தவிர்க்க முடியாத துன்பம்.

வெளிநாட்டில் நாம் உழைப்பது நமது குடும்பத்திற்காக தான் என்றாலும் அதிலிருந்து சம்பந்தமேயில்லாமல் அந்நியச் செலாவணி எனும் வகையில் ஆதாயத்தை மட்டுமே அடைவது இந்திய அரசு. இந்நிலையில் நமக்கு கிடைக்கும் குறுகிய நாள் விடுமுறையில் குடும்பத்துடன் செலவிட செல்லும் முழுக்க முழுக்க கரைபடாத வெள்ளை பணத்திற்கு சொந்தக்காரர்களாகிய நாம் இந்தியாவில் தங்கியிருக்கும் நாட்களில் செலவுக்கு பணமின்றி மண்ணையா அள்ளித்தின்ன முடியும்! 

நாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அல்ல, சம்பாத்தியத்திற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குள் தள்ளப்பட்ட இந்தியர்கள். 50 நாட்களுக்குள் நிகழும் என சொல்லப்படும் அந்த ஜீம்பூம்பா மாற்றத்திற்கு முன் அமைந்துவிட்ட எங்கள் விடுமுறை நாட்களில் எங்களுக்கான தீர்வு என்ன?

இவண்

தற்போது விடுமுறையில் வந்துள்ள அல்லது வரவுள்ள வெளிநாடுவாழ் அனைத்து வெள்ளைப்பண இந்தியர்களுக்காக

அதிரை அமீன்

Wednesday, November 9, 2016

வாலிப பருவம் எதிர்நோக்கும் சவால்கள் - சிறப்புரை மவ்லவி. அப்துல் பாசித் புஹாரி (துபையில் 11.11.2016 வெள்ளி மஃரிபுக்கு பின்)

இன்ஷா அல்லாஹ்...
அல்மனார் சென்டர், துபை 
மார்க்க விளக்க நிகழ்ச்சி
11.11.2016 வெள்ளிக்கிழமை, மாலை 06.30 மணிஅனைவரும் அவசியம் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்.
-- 
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931

Wednesday, November 2, 2016

Tuesday, October 25, 2016

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!அன்பு நிறைந்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமதூரில், அதிரையின் கல்வித்தந்தை ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களின் தன்னலமற்ற தியாகத்தால் உருவாகிய கல்வி நிறுவனங்கள் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கண் திறந்துள்ளது இனியும் திறக்கும் இன்ஷா அல்லாஹ். அன்னார் மற்றும் அவருடன் கல்விப்பணியில் இணைந்து பயணித்து மறைந்த அனைத்து ஊழியர்கள், பேராசிரியர்களின் மறுமை சிறக்க இருகரமேந்தி நன்றியுடன் பிரார்த்திக்கின்றோம்.

சில பத்தாண்டுகளுக்கு முன் நமது கல்லூரியை தேடிவந்து பல வெளிநாட்டு மாணவர்கள் (ஆப்பிரிக்கர்கள்) படித்த நினைவுகள் நெஞ்சோடு இன்னும் நிழலாடுகிறது. இத்தனைக்கும் அவர்கள் தங்கிப்படிக்கும் அளவுக்கு நமதூரின் கட்டமைப்பு இருக்கவில்லை, இன்றும் இல்லை.

காடு, செடிகளுக்கு மத்தியில் சாதாரண சிமெண்ட் ஓட்டுக்கட்டிடங்களில் நடந்து வந்த நமது கல்லூரி இன்று பலரின் உழைப்பால் ஒரு வளர்ந்த நகரத்தில் செயல்படும் கல்லூரிக்கு இணையாக பொலிவுற்று விளங்குகின்றது அல்ஹம்துலில்லாஹ், இது புறத்தோற்றம்.

இன்றுள்ள பேராசிரியப் பெருந்தகைகளின் முயற்சியால் மாணவர்களுக்கு வழிகாட்டும் பல்வேறு கருத்தரங்குகள், வேலைவாய்ப்பு முகாம்கள் என நடத்தி அசத்தி வருகின்றீர்கள், இந்த அகத்தோற்ற வளர்ச்சியை சமூக ஊடகங்கள் வழியாக அறிந்து மிக்க பெருமிதம் கொள்கின்றோம். இதையே நடந்து முடிந்தபின் செய்திகளாக தருவதைவிட நடக்குமுன் அறியத்தந்தால் நமது கல்லூரியில் பயிலும் நாங்கள் அறிந்த மாணவர்களையும் ஆர்வமூட்டி கலந்து கொள்ளச் செய்ய இயலும்.

மேலும், இந்தக் கருத்தரங்குகளில் மாணவர்களைவிட மாணவிகளே பெரும்பான்மையாக கலந்து கொள்கின்றனர், அதிலும் நமதூர் மாணவர்கள் மிக மிக அரிதாக கலந்து கொள்கின்றனர். எனவே, மாணவர்களும் அதிகம் பங்குகொள்ள ஆர்வமூட்டுவதுடன் நமதூர் மாணவர்களும் பயன்பெற அவர்களின் பெற்றோருக்கு தெரிவித்தாவது முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.


உங்களிடம் மேலும் சில கனிவான வேண்டுகோள்:

இன்று நமதூரை சேர்ந்த, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் உள்நாட்டிலும் பல சர்வதேச நாடுகளிலும் பொருளீட்டி வருகின்றனர் என்றாலும் வேறு எந்த நாடுகளையும் விட அதிகமானோர் பணியாற்றும் அமீரகத்தில் நமது அதிரையை சேர்ந்த பல மாணவர்கள் படும்பாட்டை உங்களிடம் சுட்ட விரும்புகிறேன்.

பட்டதாரியானால் போதும் என்ற மனநிலையுடன் படித்துவிட்டு அமீரகத்திற்குள் நுழையும் அதிரை மாணவர்கள் இங்கு நேர்முகத்  தேர்வை சந்திப்பதற்கும், ஆங்கிலத்தில் ஓரளவேனும் உரையாடுவதற்கும் மிகுந்த தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் பலர் பட்டதாரியாக இருக்கும் நிலையில் கல்வியறிவு அதிகம் தேவையில்லாத 'பைக் மெஸஞ்சர்' போன்ற ஆபத்தான பணிகளையே தேர்ந்தெடுக்கின்றனர், இந்த நிலைக்கு அவர்களுக்கு முன்வந்து அமீரகத்தில் பணியாற்றும் அவர்களின் நண்பர்களின் தவறான வழிகாட்டலும் இன்னொரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, நமது கல்லூரி மாணவர்கள் ஓரளவு ஆங்கிலத்தில் பதிலளிக்கவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் தினசரி வகுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் மனநல வல்லுனர்களை கொண்டு நம்பிக்கையளிக்கும் ஆலோசணை கருத்தரங்குகளையும் அடிக்கடி நடத்திட வேண்டுகிறோம்.

மிக முக்கியமாக, பேராசிரியப் பெருந்தகைகளே! உங்களுடைய திறமைகளை, அர்ப்பணிப்பு உணர்வுகளை, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் உங்களுடைய நல்லெண்ணத்தை மதிக்கும் அதேவேளையில் உங்களுக்குப் பின்னும் இத்தூய பணிகளை தொடர்ந்து செய்திடும் கல்வி வாரிசுகளை உருவாக்கிவிட்டு செல்வதும் உங்களுடைய கடமை என்பதை உணர்ந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளை இயன்றளவு இப்பொழுதே செய்யத் துவங்குவீர் எனவும் நம்புகிறோம்.